தீவிரமடையும் போர்களம்! உக்ரைனுக்கு எதிராக வகுக்கப்படும் பயங்கர திட்டம்
ஜனாதிபதி புடினின் திட்டங்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக ரஷ்யாவின் வாக்னர் குழு கூலிப்படை தங்கள் போராளிகளை முன்வரிசைக்கு அனுப்பி உதவி வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவின் வாக்னர் குழுவில் மே மாதத்திற்குள் சுமார் 30,000 பேர் நியமிக்கப்படலாம் என வாக்னர் தலைவர் தெரிவித்துள்ளார்.
வாக்னர் குழு
உக்ரைனுடனான போரில் ஆயிரக்கணக்கான போராளிகளை வாக்னர் குழு இழந்து இருக்கும் நிலையில், மே மாதத்தின் நடுப்பகுதியில் சுமார் 30,000 புதிய போராளிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக அதன் நிறுவனர் எவ்ஜெனி பிரிகோஜின் தெரிவித்துள்ளார்.
இதற்காக கடந்த வாரம் 42 ரஷ்ய நகரங்களில் வாக்னர் ஆட்சேர்ப்பு மையங்கள் திறக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் சராசரியாக ஒரு நாளைக்கு 500-800 பேரை பணியமர்த்துவதாக டெலிகிராம் ஆடியோ செய்தியில் பிரிகோஜின் குறிப்பிட்டார்.
புடினுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட நபர்
இந்த வாக்னர் குழு ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட தொழிலதிபர் யெவ்ஜெனி பிரிகோஜின் என்பவரால் நிறுவப்பட்டது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தொடர்ந்து, மேற்கத்திய நாடுகளால் தடை விதிக்கப்பட்ட ரஷ்ய பிரபலங்களில் வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினும் ஒருவராவார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

உக்ரைனில் இறங்கிய பிரித்தானியாவின் சேலஞ்சர் 2 டாங்கிகள்! புடின் எச்சரிக்கையை மீறிய நடவடிக்கைகள் News Lankasri

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri
