புதுக்குடியிருப்பில் மாடு கடத்திய மூன்று இளைஞர்கள் கைது
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வெகனார் வாகனத்தில் மாட்டினை கடத்தி சென்ற மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(2.2.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக மாடுகள் களவாடப்பட்டு வரும் நிலையில் நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளது.
கைது
இதன்போது, புதுக்குடியிருப்பு ஒட்டுசுட்டான் வீதி ஆடைதொழிற்சாலைக்கு முன்பாக நின்ற மாட்டினை இறைச்சிக்காக களவாடிய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
மாடு கடத்தல்
குறித்த இளைஞர்கள் தொடர்ச்சியாக மாடு கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் கனகராயன்குளம், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு பகுதிகளை சேர்ந்த 19,21,29 வயதுடைய இளைஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சன் டிவி சீரியலில் நாயகனாக நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்... யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam
நடிகர் ஜீவாவின் தந்தை, தயாரிப்பாளர் RB சவுத்ரி விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் சினிமா துறை Cineulagam