கிண்ணியாவில் மூன்று இளைஞர்கள் அதிரடியாக கைது!
திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவில் ஐஸ் போதைப்பொருளைப் பாவித்ததாகக் கூறப்படும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிண்ணியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று (21.) மாலை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் 18 வயதுடையவர்கள் என்றும், மற்றையவர் 25 வயதுடையவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சட்ட நடவடிக்கை
18 வயதுடைய இருவரும் கிண்ணியா அரை ஏக்கர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், 25 வயதுடையவர் அண்ணல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Bigg Boss 10: டிடிஎஃப்-ற்கு எதிராக முனியம்மா போட்ட முகமூடி... வெளியேறும் இரண்டு போட்டியாளர்கள் Manithan