தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்: காணாமல் போன மூவரில் ஒருவர் சடலமாக மீட்பு
சூரியவெவ - மஹவெலிகடர குளத்தில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானமையை அடுத்து நீரில் மூழ்கிய 8 பேரில் காணாமல் போயிருந்த மூவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
10 வயதுடைய சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அனர்த்தம்
குருநாகல் பகுதியிலிருந்து சூரியவெவ பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றவர்கள் மீன்பிடிப்பதற்காக படகில் சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இந்தநிலையில் குறித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானமையை அடுத்து நீரில் மூழ்கிய 8 பேரில் மீட்கப்பட்ட 5 பேரின் உடல்நிலை நலமாக உள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்டவர்களில் 8 மாதக் குழந்தை ஒன்றும் உள்ளது.
தொடரும் மீட்பு நடவடிக்கை
காணாமல் போயுள்ள 16 மற்றும் 18 வயதுடைய இரு பெண்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சூரியவெவ பொலிஸார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு கடற்படையினரையும் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
தென்னிலங்கையில் படகு சவாரி சென்று மூன்று யுவதிகள் காணாமல் போயுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூரியவெவ, மஹாவெலிக்கட பகுதியில் படகில் சவாரி சென்ற போதே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
சவாரியின் போது படகு கவிழ்ந்தில் அதில் மொத்தம் 8 பேர் இருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
8 மாத கைக்குழந்தை உட்பட 5 பேர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்ட பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவத்தில் குருநாகல் பகுதியை சேர்ந்த 18, 17 மற்றும் 10 வயதுடைய பதின்ம வயதுடைய யுவதிகளே காணாமல் போயுள்ளனர்.
குறித்த மூன்று யுவதிகளை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
