கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் உயிரிழந்த 3 வயது குழந்தை : சபையில் எழுப்பப்பட்ட கேள்வி
இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்ட நிலையில் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் (Lady Ridgeway Hospital for Children) உயிரிழந்த மூன்று வயதுக் குழந்தை தொடர்பில் இன்னமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில், இன்று (23.07.2024) விசேட உரையொன்றை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்
“ஹம்தி என்ற குழந்தை இறந்து ஒரு வருடம் ஆகிறது. சத்திர சிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர் நளின் விஜேகோன் மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்த வைத்தியர் நுவன் ஹேரத் ஆகியோரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
சுகாதார அமைச்சு
மேலும், அந்த இரண்டு சிறுநீரகங்களும் இன்று மருத்துவமனையில் இல்லை. சிறுநீரகம் அகற்றப்பட்டால், அது மருத்துவமனையில் இருக்க வேண்டும்.

ஓராண்டு கடந்தும் இதுவரை அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இது தொடர்பாக சுகாதார அமைச்சு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனை தொடர்ந்து, சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன (Ramesh Pathirana) பதிலளிக்கையில்,
"இதற்கு என்னிடம் இன்னும் பதில் இல்லை. அறிக்கை பெற்று அடுத்த வாரம் பதில் அளிக்கப்படும்“ என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 5 மணி நேரம் முன்
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam