யாழில் விசேட அதிரடி படையினரின் சுற்றிவளைப்பில்13 பேர் கைது
யாழ்ப்பாணம் - கரவெட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போது 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் இணைந்து விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் எமது ஊடகப்பிரிவு நெல்லியடி பொலிஸாரை தொடர்பு கொண்டு வினவியபோது நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட திறந்த பிடியாணைகளுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த சந்தேகநபர்கள் தலைமறைவாக இருந்த போது கைது செய்யப்பட்டதாக மேலும் சுட்டிக்காட்டினார்.
[TS8LJKS ]
தடுத்து வைத்து விசாரணை
கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும், அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கெய்ர் ஸ்டார்மர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதி: கடுமையாகத் தாக்கிய பிரபலம் News Lankasri