3 மாணவர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதி!
தலவாக்கலை பகுதியில் இயங்கும் தமிழ் பாடசாலை ஒன்றில் இன்று (16) தரம் 6 இல் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் நச்சுத்தன்மை வாய்ந்த அல்லது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் கொண்ட வாசனை திரவியங்களை நுகர்ந்துள்ளனர்.
இதனால் திடீர் சுகவீனம் அடைந்த மாணவர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்கள்
நச்சுத்தன்மை வாய்ந்த வாசனை திரவியங்களை நுகர்ந்தன் காரணமாக குறித்த மாணவர்களுக்கு தலைசுற்றல், தலைவலி, குமட்டல் வாந்திபேதி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக லிந்துலை பிரதேச பிராந்திய வைத்திசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி அசேல மல்லவராச்சி தெரிவித்துள்ளார்.
எனினும் மாணவர்களின் உடல்நிலை மோசமானதாக இல்லை எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
தலவாக்கலை பகுதியில் இயங்கும் குறித்த தமிழ் பாடசாலையில் தரம் 6 இல் கல்வி கற்கும் ஒரு மாணவர் பாடசாலைக்கு கொண்டு வந்து நறுமண போத்தலை ஏனைய மாணவர்களுக்கும் நுகர்ந்ததால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 10 மணி நேரம் முன்

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri
