உக்ரைனுக்காக போராடிய 3 இலங்கையர்கள் ரஷ்ய தாக்குதலில் பலி
உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றிய இலங்கையர்கள் மூவர் ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் ஆயுதப் படைகளின் முதலாவது சிறப்பு படைகளின் தளபதி விசேட அதிரடிப்படையின் தளபதியாக கடமையாற்றிய இலங்கையரான ரனிஷ் ஹேவகே உட்பட இலங்கை இராணுவத்தின் முன்னாள் வீரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நேற்று முன்தினம் ரஷ்ய இராணுவ தாக்குதலில் இவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படடுள்ளது.
இலங்கை கல்வி முறையில் மாற்றம் : புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம்
கொமாண்டோ படை
ரஷ்ய இராணுவத்தின் கறுப்பு என்று அழைக்கப்படும் ரஷ்யர்களின் இலக்காகவும் ரனிஷ் ஹேவகே பெயரிடப்பட்டிருந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அவர் இலங்கை காலாட்படை மற்றும் கொமாண்டோ படையில் பயிற்சி பெற்று, சட்டப்பூர்வமாக வெளியேறிய பின்னர் உக்ரைனிய இராணுவத்தில் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் உறுப்பினராக சேர்ந்தார்.
போர் முனையில் ஒன்பது முறை காயம் அடைந்து உக்ரைனின் பாதுகாப்பிற்காக போராடிய ரனிஷ் ஹெவகே, அந்நாட்டு இராணுவத்தில் கேப்டன் டென்டிஸ் என்ற பெயரில் அறிமுகமானார்.
உக்ரைன் படையினர்
உக்ரைனின் முன்னோக்கி பாதுகாப்பு எல்லைக்கு அப்பால் நடவடிக்கையில் இணைந்த ரனிஷ் ஹெவகேவின் கீழ் உள்ள பிரிவில் பிரியந்த என்ற இலங்கை இராணுவ வீரர் இணைந்தார்.
போர் முனையில் ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல்களால், உக்ரைன் படையினர் இறந்த இராணுவ வீரர்களின் உடலை எடுக்க முன்வரவில்லை என தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri