மட்டக்களப்பில் பொது சுகாதார உத்தியோகத்தர் வீட்டில் திருடிய சந்தேகநபர்கள் கைது (Photos)
மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சையடி பிரதேசத்தில் பொது சுகாதார உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டை உடைத்து தாலிக்கொடி உட்பட தங்க நகைகளை திருடிச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்றைய தினம் (09.01.2023) கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் மோட்டர் சைக்கிள் என்பன இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
பொது சுகாதார உத்தியோகத்தரும், அவரது மனைவியும் கடந்த 3ம் திகதி காலை வீட்டை பூட்டிவிட்டு கடமைகளுக்கு சென்று பிற்பல் 1 மணியளவில் வீடு திரும்பிய போது வீட்டின் கூரையை உடைத்து தங்க நகைகள் திருடிச் செல்லப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் அவர்கள் முறைப்பாடு பதிவு செய்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்த நிலையிலேயே பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கொக்குவில், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுகளிலுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த 39, 36, 43 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 6 மணி நேரம் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam
