கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று வெளிநாட்டு பயணிகள் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று வெளிநாட்டு பயணிகள் நேற்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
136,20,000 ரூபாய் மதிப்புள்ள 454 கையடக்க தொலைபேசிகள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கையடக்க தொலைபேசி
சந்தேக நபர்கள் மலேசியாவின் கோலாலம்பூரில் வசிக்கும் 26, 49 மற்றும் 22 வயதுடைய மூன்று தொழிலதிபர்கள் என அவர்கள் கையடக்க தொலைபேசி கடைகளை நடத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

அவர்கள் கொண்டு வந்த 04 பொதிகளில் கையடக்க தொலைபேசிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2 எண்ணெய் கப்பல்களை அதிரடியாக தாக்கி அழித்தது ஈரான்! கொழுந்துவிட்டு எரியும் காட்சிகள் - தீவிரமடையும் கள நிலவரம்..
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 15 மணி நேரம் முன்
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri