வடமாகாணத்தில் அமையவுள்ள மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வளையங்கள்
வட மாகாணத்தில் 3 இடங்களில் மூன்று முதலீட்டு ஊக்குவிப்பு வளையங்கள் அமையவுள்ளது என யாழ்ப்பாண வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.
நேற்று(12) வணிகர் கழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“காங்கேசன்துறை சீமெந்து தொழிற்காலை அமைந்துள்ள வளாகம், பரந்தன் இரசாய தொழிற்சாலை வளாகம், மாங்குளம் நகர அபிவிருத்தி வளாகம், இந்த 3 இடங்களில் முதலீட்டு ஊக்குவிப்பு வலையங்கள் அமையவுள்ளது.
இங்கு பல தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். முதலீட்டு ஊக்குவிப்பு வலையங்களில் நீர் வழங்கல். மின்சாரம், வீதி புனரமைப்பு என்பன ஒழுங்கு செய்து தரப்படும்.
30 வருட குத்தகைக்கு இந்த இடம் வழங்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ஸ்ருதி அம்மா செய்த கேவலமான வேலை, முத்து, ரவிக்கு தெரிந்த உண்மை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
