யாழில் மூன்று மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு
பிறந்து மூன்று மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று நேற்று (26) யாழ்ப்பாணத்தில் (Jaffna) பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
பன்னாலை - தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த பங்கஜன் சிறீதிகன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு கடந்த 24ஆம் திகதி காய்ச்சல், இருமல், சளி ஏற்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை
இதனை தொடர்ந்து, அதற்கு சிகிச்சை வழங்குவதாக பெற்றோர் குழந்தையை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டவேளை மேலதிக சிகிச்சைக்காக குழந்தை நேற்று (25) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்ட நிலையில் இருதய செயலிழப்பு காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri