மண்சரிவால் தாயை பிரிந்த 3 மாத குழந்தை! இராணுவத்தினர் ஆற்றிய அளப்பரிய பணி
மீமுரேவில் ஏற்பட்ட மண்சரிவினால் தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட 3 மாத குழந்தையை இராணுவத்தினர் தாயாரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த சம்பவமானது இன்றையதினம்(5) இடம்பெற்றுள்ளது.
அத்தோடு, இதற்கான உதவியை இராணுவத்தினர் விமானப்படையினரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
இராணுவத்தினரின் பணி
இதனையடுத்து, குழந்தையின் தாயார் கருத்து தெரிவிக்கையில், நானும் எனது குழந்தையும் 27ஆம் திகதி முதல் பிரிந்து இருந்தோம்.
நான் அபிசாவளையில் இருந்தேன்.எனது குழந்தை மீமுரேவில் இருந்தது.இந்தநிலையில் குழந்தை பற்றியோ, குடும்பத்தார் பற்றியோ எந்த தகவலும் கிடைக்கவில்லை.

நான் மிகவும் மனமுடைந்து இருந்தேன்.இந்த நிலையிலே இராணுவத்தினர் எனக்கு உதவி குழந்தையை என்னிடம் சேர்த்துள்ளனர்.அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி எனத் தெரிவித்துள்ளார்.
இதேனிடையே மீமுரேவில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இராணுவ மருத்துவக்குழுக்கள் சுகாதாரப் பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.