கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்
சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மூன்று விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
இந்த மூன்று விமானங்களும் இன்று பிற்பகல் விமான நிலையத்திற்கு வருகை தந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
மோசமான வானிலை
டோக்கியோவில் இருந்து UL 455 மற்றும் மாலேயில் இருந்து EK 652 ஆகிய இரண்டு விமானங்கள் இந்தியாவிற்கு திருப்பி விடப்பட்டன.
மோசமான வானிலை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையம்
மூன்றாவது விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவதில் ஆபத்தான நிலைமை காணப்பட்டமையால், மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
மாலேயில் இருந்து வந்த UL121 விமானம் ஒன்றே இவ்வாறு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சீரற்ற காலநிலையால் நாடாளவிய ரீதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





சூப்பர் சிங்கர் ஸ்பூர்த்தியை உங்களுக்கு நினைவு இருக்கா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

முத்துவை அசிங்கமாக பேசிய சீதா, கோபத்தில் பளார் என அறைந்த மீனா.. சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் Cineulagam
