வவுனியாவில் 3 இடைத்தங்கல் முகாம்களில் பல குடும்பங்கள் தொடர்ச்சியாக தங்க வைப்பு!
வவுனியாவில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பினால் 79 குடும்பங்களை சேர்ந்த 232 பேர் தொடர்ச்சியாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு இன்று (09) தெரிவித்துள்ளது.
அண்மையில் நாட்டில் ஏற்ப்பட்ட வெள்ளப் பேரிடர் காரணமாக வவுனியா மாவட்டத்திலும் கடுமையான பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மொத்தமாக 58 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இடைத்தங்கல் முகாம்
தற்போது மழைவீழ்ச்சி குறைவடைந்த நிலையில முகாம்களில் இருந்த மக்கள் மீண்டும் தமது வீடுகளிற்கு திரும்பியிருந்தனர்.

இருப்பினும் கடுமையான பாதிப்புக்களை சந்தித்த வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் 3 இடைத்தங்கல் முகாம்கள் தொடர்ச்சியாக செயற்பட்டு வருவதுடன் அங்கு 79 குடும்பங்களை சேர்ந்த 232 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான சமைத்த உணவுகள் வழங்கப்படாது வருவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
காயத்ரி பிரச்சனை முடிந்ததும் சோழனை தனியாக அழைத்துச்சென்று நிலா சொன்ன விஷயம்... அய்யனார் துணை சீரியல் அடுத்த கதைக்களம் Cineulagam
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri