கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் விபத்து! மூவர் பலி - எட்டு பேர் காயம் (Video)
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதியின் பனிக்கன்குளம் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி இடம்பெற்ற கோர விபத்து சம்பவத்தில் மூவர் பலியானதோடு எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு - வெல்லம்பிட்டி பகுதியில் இருந்து யாழ். நோக்கி பொருட்களை ஏற்றியவாறு இரண்டு சிறிய ரக லொறிகளில் சுமார் 15 பேர் அளவில் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் பனிக்கன்குளம் பகுதியில் இன்று (15.08.2023) அதிகாலை பயணித்துக் கொண்டிருந்த போது ஒரு லொறியின் டயர் காற்று போன நிலையில் இரு வாகனங்களையும் நிறுத்தி ஒரு லொறிக்கு டயர் மாற்றியுள்ளனர்.
இவ்வாறு இவர்கள் டயர்கள் மாற்றிக்கொண்டிருந்த போது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக வந்த கே.டி.எச் ரக வாகனம் ஒன்று அதிகாலை மூன்று மணியளவில் பனிக்கன்குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோதியுள்ளதுடன், அந்த வாகனம் மற்றைய வாகனத்தில் மோதியுள்ளது.
இந்த நிலையில் கே.டி.எச் ரக வாகனத்தில் வந்த சாவகச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவரும், வெல்லம்பிட்டி பகுதியில் இருந்து வந்த வாகனங்களின் டயர்களை மாற்றிக் கொண்டிருந்தவர்களில் இருவருமாக மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்த மூவரின் சடலங்களும் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காயமடைந்தவர்களில் மூவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலையிலும், ஐவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - எரிமலை
முதலாம் இணைப்பு
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று அதிகாலை மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
அதே திசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்பகுதியில் வான் மோதியதிலேயே குறித்த லொறிக்கு முன்னால் சென்ற மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது பின்னால் இருந்த லொறியின் சாரதி வாகனத்தை விட்டு இறங்கியதில் இரண்டு லொறிகளில் சிக்கி பலத்த காயங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள்
லொறியின் பின்பகுதியில் பயணித்த ஒருவரும், வானின் முன் இருக்கையில் பயணித்த நபரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.
மேலும், வானில் பயணித்த மூன்று பெண்களும், லொறியில் பயணித்த ஆண் ஒருவரும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், லொறியில் பயணித்த மூன்று ஆண்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லேரியா, வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி ப்ளாக் பஸ்டர் வெற்றி.. அஜித் அடுத்த படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam

தனது திருமணம் முடிந்த கையோடு நட்சத்திர ஜோடியின் திருமணத்திற்கு சென்ற பிரியங்கா.. புகைப்படம் இதோ.. Cineulagam
