கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்பு
மட்டக்குளி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (29.10.2025) விசாரணைகள் தொடங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவரின் அடையாளங்கள்
மட்டக்குளி காக்கைத் தீவு கடற்கரையிலும், களனி ஆற்று முகத்துவாரத்திற்கு அருகிலும் இரண்டு அடையாளம் தெரியாத சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இறந்தவரின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்குளியில் மீட்கப்பட்ட சடலங்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 23 மணி நேரம் முன்
2016ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த கொடி, காஷ்மோரா.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
போரை தொடங்குமா பாகிஸ்தான்? - அமெரிக்கா உடன் ரகசிய ஒப்பந்தம்; பேச்சுவார்த்தையில் வெளிநடப்பு News Lankasri