இலங்கைக்கு கஞ்சா கடத்த இராமேஸ்வரத்தில் பதுங்கியிருந்த மூவர் கைது

Sri Lanka India Rameswaram
By Rakesh Jun 26, 2024 04:17 PM GMT
Report

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்குக் கஞ்சா கடத்துவதற்காக இராமேஸ்வரம் தங்கும் விடுதியில் பதுங்கி இருந்த இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து கஞ்சா மற்றும் இலங்கை ரூபா நோட்டுகளைப் பறிமுதல் செய்த மாவட்ட பாதுகாப்பு கண்காணிப்பாளர் தனிப்பிரிவுப் பொலிஸார் தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் - இராமேஸ்வரம், இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் தனுஷ்கோடி கடல் வழியாக நாட்டுப் படகுகளில் இலங்கைக்கு கஞ்சா, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிகளவு கடத்தப்பட்டு வருகின்றன.

யாழ்.மீசாலை பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

யாழ்.மீசாலை பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்


போதைப்பொருள் கடத்தல்

இந்நிலையில், இராமேஸ்வரத்தில் தங்கி தனுஷ்கோடி கடல் வழியாகப் போதைப்பொருள் கடத்தல் தொழில் செய்வதற்கு இலங்கை புத்தளம் மாவட்டம், கற்பிட்டி யைச் சேர்ந்த அந்தோணி பிரவீன் (வயது 35) என்பவர் கடந்த மே மாதம் 31ஆம் திகதி விமான மூலம் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஜூன் 1ஆம் திகதி காலை சென்னை வந்து இறங்கி பின்னர் அங்கிருந்து இராமேஸ்வரம் வந்து தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.

பின்னர் அவர் பெங்களூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள கஞ்சா வியாபாரிகள் பலரைச் சந்தித்து கஞ்சா கொள்முதல் செய்வதற்காக விசாரித்ததாக கூறப்படுகின்றது.

இலங்கைக்கு கஞ்சா கடத்த இராமேஸ்வரத்தில் பதுங்கியிருந்த மூவர் கைது | 3 Arrested Rameswaram To Smuggle Ganja Sri Lanka

இதனை தொடர்ந்து, இராமேஸ்வரம், புதுரோடு பகுதியைச் சேர்ந்த உமா செல்வம் (வயது 45) என்பவர் மூலம் பேக்கரும்பு பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி தியாகராஜன் (வயது 57) என்பவரைச் சந்தித்து அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்குப் படகு மூலம் கஞ்சா கடத்துவதற்கு முயற்சி செய்து வந்துள்ளார்.

மேலும், அந்தோணி பிரவீனுக்கு இலங்கை, மன்னாரைச் சேர்ந்த சுதாகர் என்பவர் இரண்டு தவணையாக கஞ்சா கொள்முதல் செய்ய 2 இலட்சம் பணம் அனுப்பியுள்ளார்.

அந்தப் பணத்தில் அந்தோணி பிரவீன் கஞ்சா தரம் குறித்து தெரிந்துகொள்வதற்காக முதல் கட்டமாக 2 கிலோ கஞ்சா பொட்டலத்தை ரூ. 35 ஆயிரத்துக்குத் தியாகராஜனிடம் வாங்கியுள்ளார்.

இலங்கைக்கு கஞ்சா கடத்த இராமேஸ்வரத்தில் பதுங்கியிருந்த மூவர் கைது | 3 Arrested Rameswaram To Smuggle Ganja Sri Lanka

இதனிடையே, இது குறித்து தகவல் அறிந்த பாதுகாப்பு கண்காணிப்பாளர் தனிப்பிரிவு இராமேஸ்வரம் ஆய்வாளர் நல்லுசாமி மற்றும் பொலிஸ் அதிகாரி பால முரளி தலைமையிலான பொலிஸார் அந்தோணி பிரவீனை சுற்றிவளைத்து கைது செய்து அவர் தங்கி இருந்த அறையைச் சோதனை செய்த போது அவரிடம் இருந்து சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் இலங்கை ரூபா 50 ஆயிரம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பொலிஸ் நடவடிக்கை

அதனைத் தொடர்ந்து, அந்தோணி பிரவீனை தனுஷ்கோடி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் தியாகராஜனிடம் கஞ்சா பொட்டலங்களை வாங்கி உமா செல்வம் என்பவர் மூலம் நாட்டுப் படகில் இன்னும் ஓரிரு நாட்களில் சுமார் 400 கிலோ கஞ்சா பொட்டலங்கள் அடங்கிய மூட்டையை இலங்கைக்கு கடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு கஞ்சா கடத்த இராமேஸ்வரத்தில் பதுங்கியிருந்த மூவர் கைது | 3 Arrested Rameswaram To Smuggle Ganja Sri Lanka

இதையடுத்து தியாகராஜன், உமா செல்வம் இருவரையும் கைது செய்த பொலிஸார், இலங்கையைச் சேர்ந்த அந்தோணி பிரவீன் உட்பட மூவர் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி மூவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நெருக்கடியான நேரத்தில் சீனாவிடம் இருந்து இலங்கைக்கு கிடைத்த முக்கிய உத்தரவாதம்

நெருக்கடியான நேரத்தில் சீனாவிடம் இருந்து இலங்கைக்கு கிடைத்த முக்கிய உத்தரவாதம்

வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது : வெளியான அறிவிப்பு

வரியின்றி வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது : வெளியான அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US