கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று வர்த்தகர்கள் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று இலங்கை விமானப் பயணிகள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(27.11.2029) நண்பகல் இடம்பெற்றுள்ளது.
சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளின் தொகுதியொன்றை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த மூவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அபராதம்
குறித்த சிகரெட் தொகுதியைச் சீனாவிலிருந்து கொள்வனவு செய்து மலேசியாவிற்குச் சென்று, அங்கிருந்து நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 32 வயதுக்கு இடைப்பட்ட வர்த்தகர்கள் மூவராவர்.

அவர்களால் கொண்டுவரப்பட்ட பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சீனாவில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான 47,000 சிகரெட்டுகள் அடங்கிய 235 சிகரெட் காட்டூன்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் முறையான சுங்க விசாரணையை முன்னெடுத்ததன் பின்னர், குறித்த சிகரெட்டுகளை அரசுடமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன், சந்தேகநபர்கள் மூவருக்கும் 175,000 ரூபாய் அபராதம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆங்கிலக்கால்வாயைக் கடக்க புலம்பெயர்வோர் பயன்படுத்தும் படகுகளை விற்பவர் மீது கைது வாரண்ட் News Lankasri
Tamizha Tamizha: முன்னாள் காதலியை நினைத்து கணவர் செய்யும் செயல்! தரமான பதிலடி கொடுத்த மனைவி Manithan