அம்பாறையில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது
நீண்ட காலமாக போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த இளம்பெண் உட்பட மூவர் சாகாமம் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நீண்ட நாட்களாக போதைப் பொருள் வியாபாரத்தில் குறித்த இளம் பெண் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பில் சாகாமம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, நேற்று(24) மாலை சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் பெண் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
மேலும் கைதான 27 முதல் 32 வயதிற்குட்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப் பொருட்கள் ஒரு தொகுதி மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த மூவரையும் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 15 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

இந்தியாவின் புதிய ஏவுகணை சோதனை., இந்திய பெருங்கடலில் 2,530 கிமீ ஆபத்தான பகுதியாக அறிவிப்பு News Lankasri
