மட்டக்களப்பில் இரு வேட்பாளர்கள் உட்பட 3 பேர் கைது
ஏறாவூர் மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறு விளைவித்த ஜக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜக்கிய தேசிய கட்சிகளை கொண்ட இரு வேட்பாளர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்று (6) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓட்டுமாவடி அந்நூர் பாடசாலையில் வாக்களிப்பு நிலையத்துக்கு அருகில் ஒரு கட்சியின் வேட்பாளர் அவரது ஆதரவாளர் உட்பட இருவர், வாக்காளர்களை சுதந்திரமாக வாக்களிக்க விடாது இடையூறு விளைவித்துள்ளனர்.
வாக்களிப்புக்கு இடையூறு
இதையடுத்து குறித்த வேட்பாளர் மற்று ஆதரவாளரை பொலிஸார் கைது செய்தனர்.
அதேவேளை, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராங்கேணி வாக்களிப்பு நிலையத்துக்கு சென்ற ஜ.தே.கட்சி வேட்பாளர் ஒருவர் சென்று தமது கட்சிக்கு வாக்களிக்குமாறு கோரி வாக்களிப்புக்கு இடையூறு விளைவித்த வேட்பாளரை கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தந்த பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்னர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய்.., கவலையுடன் தேடி அலையும் மகன் News Lankasri
