துசித ஹல்லோலுவை மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் மூவர் கைது
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக பணிப்பாளர் துசித ஹல்லோலுவையின் ஜீப் வண்டி மீதான துப்பாக்கிச் சூடு தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாரஹேன்பிட்டி சுற்றுவட்ட வீதியில் கடந்த 17ஆம் திகதி தனியார் வைத்தியசாலைக்கு அருகில் துசித ஹல்லோலுவை பயணித்த ஜீப் வண்டி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பிரகாரம் தற்போதைக்கு மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மூவர் கைது
இந்நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் செலுத்துனர் மற்றும் சம்பவத்திற்கு உதவிய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் வத்தளை மற்றும் கிருலப்பனை பகுதிகளில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் வைத்திருந்த 04 கையடக்க தொலைபேசிகள் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 31, 32 மற்றும் 40 வயதான வத்தளை மற்றும் கொழும்பு 14 பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
சந்தேக நபர்கள் இன்று (28) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.
நாரஹேன்பிட்டி பொலிஸார் மற்றும் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 23 மணி நேரம் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
