இலஞ்ச ஒழிப்பு ஆணையகத்தால் கைது செய்யப்பட்ட மூன்று அதிகாரிகள்
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மூன்று அதிகாரிகளை இலஞ்ச ஒழிப்பு ஆணையம் கைது செய்துள்ளது.
கிராமப்புற மேம்பாட்டு அதிகாரி,ஒருவர், அலுவலக உதவியாளர் ஒருவர் மற்றும் பெண் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம்(25) நடத்தப்பட்ட 3 தனித்தனி சோதனைகளின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையகம் தெரிவித்துள்ளது.
கைது
முதல் கட்ட சோதனையில், தெனியாய கிராம மேம்பாட்டு மையத்தில் பணிபுரியும் ஒரு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், தெனியாய பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
இரண்டாவது சுற்றிவளைப்பின் போது, சம்மாந்துறையைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், வேரஹெர மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பிரிவில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையில், மஹரகமவில் உள்ள இலங்கை ஆயுர்வேத மருத்துவக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் பெண் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam
