ஐரோப்பா செல்ல முயன்ற மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
போலி ஆவணங்களை தயாரித்து கிரேக்க நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மதியம் கைது செய்யப்பட்ட மூவரும் பங்களாதேஷ் பிரஜைகளாகும்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடியிருப்பு வீசா
இவர்கள் சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வந்த 22, 24 மற்றும் 25 வயதுடைய மூன்று பங்களாதேஷ் இளைஞர்கள் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானப் போக்குவரத்து அனுமதிக்காக வழங்கப்பட்ட கிரேக்க குடியிருப்பு வீசா தொடர்பில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் சந்தேக நபர்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
