சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் ஈட்டப்பட்டுள்ள வருமானம்
சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த 6 மாதங்களில் இந்த வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும், இந்த வருட இறுதிக்குள் மற்றுமொரு வருமான இலக்கு 3.7 பில்லியன் டொலரை எட்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகள்
மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள்தான் அதிக அளவில் உள்ளனர். பலர் மத ரீதியாக சுற்றுலா நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். கோனேஷ்வரம் ஆலயம், கதிர்காமம் போன்ற பல்வேறு இடங்களைக் காண ஏராளமான இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
அது எங்களுக்கு மிகப்பெரிய பலம். நாம் பொருளாதாரத்தில் வங்குரோத்து நிலையை அடைந்திருந்தோம் என்பது உங்களுக்கு தெரியும். இந்த நிலையிலிருந்து வெளியேற, சுற்றுலாத் துறையை விரைவாக மேம்படுத்த வேண்டும். அதற்காக நாங்கள் ஒரு இலக்கை நோக்கிச் செல்கிறோம்.
6 மாதங்களில் வருமானம்
1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் ஏற்கனவே வந்துள்ளனர். கடந்த 6 மாதங்களில் நாங்கள் 3.7 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டியுள்ளோம். இந்த வருடம் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டுள்ளோம். அதற்காக பெரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri
