இந்த ஆண்டில் 3,500 படையினர் தப்பியோட்டம்!
இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம் ஸ்ரீலங்கா ஆயுதப்படைகளைச் சேர்ந்த 25 அதிகாரிகள் உட்பட 3ஆயிரத்து 500ற்கும் அதிகமானோர் சட்டவிரோதமான முறையில் இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
பிரிகேடியர் உட்பட 13 அதிகாரிகள் தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்று இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேகாரணமாக புதிய கடவுச்சீட்டுகளைத் தயாரிப்பதற்கும் கடவுச்சீட்டுகளைப் புதுப்பிப்பதற்கும் முப்படைகளின் தளபதிகளின் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு குடிவரவு திணைக்களத்துக்கு அறிவித்துள்ளது.
தற்போது நிலவும் பொருளாதார சிரமங்களால் கடனைச் செலுத்த முடியாத நிலை,
அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகளுக்கு உள்ள வசதிகள் குறைப்பு போன்ற காரணங்களால்
இராணுவத்தினர் வெளியேற ஆரம்பித்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.
