கண்டியில் உள்ள தாய்லாந்து யானை ஆரோக்கியமாக உள்ளது! இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர்
இலங்கையில் உள்ள இரண்டு தாய்லாந்து யானைகளில் ஒன்றான பிரதுபா, கண்டி நகரில் உள்ள ஒரு ஆலயத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தின் ஊடகம் ஒன்று இதனை கூறியுள்ளது. இலங்கையில் "தாய் ராஜா" என்று அழைக்கப்படும் இந்த யானையை அண்மையில் தூதுவர் சென்று பார்வையிட்டுள்ளார்.
தூதர் போஜின் கூற்றுப்படி, குறித்த யானை திறந்த முற்றத்தில் உள்ளது, அதன் இரண்டு முன் கால்கள் மற்றும் ஒரு பின்னங்கால் மரங்களில் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளன.
ஆரோக்கியத்துடன் உள்ள யானை
ஆனால் சங்கிலிகள் இறுக்கமாக இல்லை. இந்தநிலையில், யானை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறது.
அதனை தாய்லாந்திற்கு அழைத்து செல்லும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரதுபா என்ற இந்த யானையை பொறுத்தவரை, அதற்கு வயது அதிகம் என்பதால் அதை தாய்லாந்திற்கு திருப்பி அனுப்புவது மிகவும் ஆபத்தானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |