மன்னாரில் செவிப்புலனற்றோர் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா
மன்னார் (Mannar) மாவட்டத்தின் செவிப்புலனற்றோர் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா இன்றைய தினம் (03) மன்னார் நகரமண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மன்னார் பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
விசேட திட்டம்
அதேவேளை, மன்னார் நகரத்தில் செவிப்புலனற்றோர் சங்கத்தினருக்கு காணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் புலம்பெயர் தேச உறவுகளின் நிதி அனுசரனையுடன் அவர்களுக்கான கட்டிடமும் வெகுவிரைவில் நிர்மாணிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கனடாவில் இருந்து வருகை தந்த வடக்கு - கிழக்கு செவிப்புலனற்றோர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மன்னார் மாவட்ட செவிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மன்னார் மாவட்ட செவிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்களால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களும் அங்கு கண்காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 4 நாட்கள் முன்

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா News Lankasri

இந்தியா-பிரான்ஸ் புதிய ஒப்பந்தம்: உள்நாட்டில் 5-ஆம் தலைமுறை போர் விமான எஞ்சின்கள் தயாரிப்பு News Lankasri
