வவுனியா நவீன சந்தையில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு இரு நாட்கள் கால அவகாசம் - மீறினால் சட்ட நடவடிக்கை
வவுனியா நவீன சந்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களுக்குச் சுகாதார நடைமுறைகளைச் சீராக்குவதற்கு இரு நாட்கள் கால அவசாகம் வழங்கப்பட்டுள்ளதுடன், மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வவுனியா பொது சுகாதாரப்பரிசோதகர் க.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.
நவீன சந்தை கட்டிடத் தொகுதியில் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதில் கடமையாற்றுவோர் என்பவர்களுக்கு பி.சி.ஆர் மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த கட்டிடத் தொகுதியில் சுகாதார நடைமுறைகள் சிலவற்றைச் சீராகப் பேணுவதில் இடையூறுகள் காணப்படுகின்றன. இங்கு பல நபர்கள் முகக்கவசத்தினை சீரான முறையில் அணிவதில்லை.
இப்பகுதியில் கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு 5 வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு அங்கு பணியாற்றுவோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வர்த்தக நிலையங்கள் முன்பாக மற்றும் நடைபாதைகளில் பொருட்கள் உள்ளமையினால் தொற்று நீக்கும் செயற்பாட்டை மேற்கொள்வதற்குரிய வசதிகள் இல்லை என்பதுடன் 2 நாட்கள் கால அவகாசம் வழங்குகின்றோம்.
இரு நாட்களுக்குள் வர்த்தக நிலையம் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாகவுள்ள பகுதி என்பன தொற்று நீக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்தல் கட்டாயமாகும்.
வர்த்தக நிலையத்திற்கு முன்பாக பொருட்களை வைப்பதற்கு 1 அடி மாத்திரமே நகரசபை கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதற்காகச் சுகாதார பிரிவினரின் வேண்டுகோளுக்கிணங்க 1 1 /2 அடி வரை பொருட்களை வைப்பதற்கு நகரசபையினரினால் தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுடான ஒரு மீற்றர் இடைவெளி பேணுதல் அவசியமாகும்.
இவற்றினை சீராக நடைமுறைப்படுத்தாத இடத்து ஒற்றை எண் அடிப்படையில் வர்த்தக நிலையங்களைத் திறப்பதற்கும் (50 வீதமான வர்த்தக நிலையங்கள் ஓர் நாளைக்கு என்ற அடிப்படையில்) நடவடிக்கை எடுத்துள்ளோம்.
சுகாதார நடைமுறைகளை மீறிச் செயற்படும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் தயாராகவுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.







தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
