ஈரானில் ஒரே நாளில் 29 பேருக்கு தூக்குத் தண்டனை : எழுந்துள்ள கண்டனம்
ஈரான்(Iran) ஒரே நாளில் 29 பேருக்கு நேற்று(07) தூக்குத் தண்டனையை நிறைவேற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் 26 பேர் ஒரே சிறைச்சாலையை சேர்ந்தவர்கள் என்று மனித உரிமை குழு தெரிவித்துள்ளது.
சர்வதேச அமைப்புகள்
2022ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றியது தொடர்பாக சர்வதேச அமைப்புகளின் கண்டனத்தை எதிர்கொண்ட ஒருநாள் கழித்து இந்த தூக்குத் தண்டனையானது நிறைவேற்றப்பட்டுள்ளது.

நோர்வே நாட்டை தளமாக கொண்ட ஈரான் மனித உரிமைகள் குழு வழங்கிய தகவலில், தூக்கு தண்டனை வழங்கப்பட்டவர்களில் 26 பேருக்கு தெஹ்ரானுக்கு வெளியே கராஜில் அமைந்துள்ள கெசல் ஹெசார் (Ghezelhesar) சிறைச்சாலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாவும், மீதமுள்ள 3 பேருக்கு கராஜ் நகரம் (Karaj's city) சிறைச்சாலையில் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

தூக்கிலிடப்பட்டவர்களில் இரண்டு பேர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் மீது கொலை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எப்ஸ்டீன் கோப்புகளில் அறிவியலாளரின் முகம் சுழிக்கும் புகைப்படம்: கோபத்துடன் விளக்கமளித்த குடும்பம் News Lankasri
இராணுவத்தைக் குவிக்கும் அமெரிக்கா... கப்பல்களில் எண்ணெய் நிரப்புவதை தீவிரப்படுத்தும் ஈரான் News Lankasri
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri