பாடசாலை மாணவரை கொடூரமாக தாக்கிய பொலிஸ் அதிகாரி
களுத்துறை - பயாகல பொலிஸ் போக்குவரத்து உத்தியோகத்தர்களினால்16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பயாகல, மலேகொட பிரதேசத்தை சேர்ந்த 16 வயது பாடசாலை மாணவனே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் நேற்று (07) பிற்பகல் தனது தந்தையின் மோட்டார் சைக்கிளில் நண்பருடன் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.இதன்போது நண்பர் பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவனை கடுமையாக எச்சரித்த பொலிஸார்
இதனை அவதானித்த பயாகல பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமைகளில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் அதிகாரிகள் அவர்களை துரத்திச்சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்தி கடுமையாக எச்சரித்துள்ளனர்.
இதன் காரணமாக பயந்துபோன பாடசாலை மாணவன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்று அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அவர்களைப் பின்தொடர்ந்து வந்த பொலிஸார் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வந்த மாணவனை தாக்கியுள்ளனர். மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற மாணவர் பல தடவைகள் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகி கீழே விழுந்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரொருவர் தரையில் விழுந்த உடன் தனது முதுகில் மிதித்ததாக குறித்த மாணவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தந்தை முறைப்பாடு
இதனையடுத்து தாக்குதலுக்கு உள்ளான பாடசாலை மாணவர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மாணவனின் தந்தை களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
தனது மகனை போல் இன்னுமொரு குழந்தை கொடூரமாக தாக்கப்படுவதைத் தடுக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் சார்ஜன்ட் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
