இலங்கையில் சடுதியாக உயர்வடைந்துள்ள கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 647 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3538 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 158,324 ஆக உயர்வடைந்துள்ளது.
முதலாம் இணைப்பு
நாட்டில் இன்று கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 891 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இவர்களுடன் இலங்கையில் மொத்தமான ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 677 கோவிட் தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள், திவுலப்பிட்டிய, பேலியகொடை, சிறைச்சாலை மற்றும் புத்தாண்டு கொத்தணிகளை சேர்ந்தவர்கள் எனவும் சுகாதார ஊக்குவிப்பு பணியகம் கூறியுள்ளது.
இதனை தவிர கோவிட் தொற்றுக்கு உள்ளான ஆயிரத்து 828 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இவர்களுடன் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 360 எனவும் அந்த பணியகம் கூறியுள்ளது.