நீண்ட காலமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 28 பேருக்கு நேர்ந்த கதி (Photos)
அம்பாறை பகுதியில் நீண்ட காலமாக சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 28 பேரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (09.07.2023) முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை - பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு இந்து மயானம் அருகில் உள்ள வெற்றுக் காணிகளில் தினமும் பணத்திற்காக சட்டவிரோதமாக, ஒன்று கூடி சிலர் சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்களிடம் இருந்து பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
கைதானவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்
குறித்த முறைப்பாட்டிற்கு அமைய, பெரிய நீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலின் பேரில், பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், 28 சந்தேக நபர்களை நேற்று கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக ஒன்று கூடி பல்வேறு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கைதான அனைவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதன் பின்னர் அவர்களை, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 12ஆம் திகதி புதன்கிழமை நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல்.புத்திக வழி நடத்தலில் பெரிய நீலாவணை பொலிஸார் குற்றங்களைக் குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
