சர்வதேச பொலிஸாரின் தகவலில் இலங்கையில் வெளிநாட்டவர்கள் பலர் அதிரடியாக கைது
சர்வதேச பொலிஸார் வழங்கிய தகவலின் அடிப்படையில் சீன பிரஜைகள் 28 பேர் இலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீனாவில் 30 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்து இலங்கைக்கு தப்பி வந்த நிலையில் 28 சீன பிரஜைகளும் சுற்றுலா விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 5 சீன பெண்களும் உள்ளடங்கியுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண மோசடி
சீனாவில் இணையத்தில் சுமார் இரண்டு மாதங்களாக பண மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் சர்வதேச பொலிஸார் வழங்கிய அறிவித்தலுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து மடிக்கணினிகள் மற்றும் பெறுமதியான கைத்தொலைபேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து சீன தூதரகத்தில் இருந்து மொழிபெயர்ப்பாளர் ஒருவர் வரவழைக்கப்பட்டு சந்தேகநபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam