பிரான்ஸில் இடம்பெற்ற 27ஆவது தமிழர் விளையாட்டு விழா

Tamils France World
By Dhushi Jul 10, 2026 11:06 AM GMT
Report

தமிழர் புனர்வாழ்வுக் கழகம், பிரான்ஸ், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் மற்றும் பிரான்ஸ் இணைந்து நடத்திய 27ஆவது தமிழர் விளையாட்டு விழா வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது.

இந்த நிகழ்வு கடந்த 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை L’Aire des Vents Dugny திடலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எமது தமிழ்வின், லங்காசிறி, மற்றும் ஐபிசி தமிழ் ஊடகங்களின் அனுசரணையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை

கடும் வெப்பத்திற்கு மத்தியில் நடந்த விளையாட்டு விழா

இயற்கையின் கடினமான காலநிலையினால் இந்நிகழ்வு நடப்பதற்கு சாத்தியமில்லை என இருந்த போதிலும், இடைநிறுத்தாமல் அனுமதி தந்த 93 பிராந்திய பொலிஸ் தலைமையகம், மாகாண அவைத் தலைவர் Stéphane Troussel மற்றும் திடலின் உரித்துடைய நகமன்றங்களுக்கும் ஏற்பாட்டாளர்களால் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலை 10.30 மணியளவில் இசைப்பிரியா முழங்குவாத்திய (band) அணி இசை அணியுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் இடம்பெற்ற 27ஆவது தமிழர் விளையாட்டு விழா | 27Th Tamil Sports Festival France

இதனைத் தொடர்ந்து, பிரதான பொதுச் சுடரினை த. பு. க உபதலைவர் மு. ரவிக்காந் ஏற்றி வைத்தார், தமிழீழத் தேசியக்கொடியினை நாடுகடந்த தமிழீழ அரசின் துணைப் பிரதமர் சி. மகிந்தன் ஏற்றி வைத்தார். அதன்பின்னர், தாயக விடுதலைக்காப் போராடி வீர மரணத்தை தழுவிய மாவீரர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், நினைவுகூர்ந்து அக வணக்கம் செலுத்தப்பட்டது.

திடலில் நிறுவப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நினைவுச்சுடரினை த. பு. க. உறுப்பினர் ஆ. அரியராசா ஏற்றிவைக்க, வருகை தந்த அனைவரும் மலர் வணக்கம் செலுத்தினர் பாரம்பரிய இண்னியம் இசை நடனத்துடன் நகரபிதாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், விருந்தினர்கள், வர்த்தகர்கள், தொண்டர்கள், கலைஞர்கள், சமூக ஊடகத்தினர், மக்கள் அனைவரும் திடலின் மத்தியில் நாட்டப்பட்ட கொடிக்கம் வரை அழைத்து வரப்பட்டுள்ளனர்.

10 ஆயிரம் மக்கள் பங்கேற்பு

பிரான்ஸ் நாட்டின் தேசியக் கொடியினை ஸ்டீபன் துர்சல்லும், ஐரோப்பிய ஒன்றியக் கொடியினை அலன் ஆனந்தனும், த. பு. க. கொடியினை த. பு .க. பிரான்ஸ் உறுப்பினர் த. செல்வரஞ்சனும் ஏற்றிவைத்தனர்.

மங்கள விளக்கினை கலந்துகொண்ட பிரமுகர்கள், வர்த்தக உரிமையாளர்கள், தேசிய செயற்பாட்டாளர்கள் இணைந்து ஏற்றி வைத்துள்ளனர்.

பிரான்ஸில் இடம்பெற்ற 27ஆவது தமிழர் விளையாட்டு விழா | 27Th Tamil Sports Festival France

வருகை தந்த விருந்தினர்கள் மற்றும் இரு இசை இளம் அணி இசைக்கலைஞர்களும் நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் இதன்போது மதிப்பளிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, விளையாட்டுக்கள், கலை நிகழ்வுகள் ஆரம்பமாகி ஒதுக்கப்பட்ட குடில்களில் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.

அதன்பின்னர், சிறப்பு விருந்தினர்கள், தமிழர் புனர்வாழ்வுக் கழக செயற்பாட்டாளர்கள், தாயக செயற்பாட்டாளர்கள், துறைசார் விளையாட்டு செயற்பாட்டாளர்கள், தமிழ்ச் சங்கப் பிரதிநிதிகள், வர்த்தக உரிமையாளர்கள், கலைஞர்கள் மற்றும் பல பிரமுகர்கள் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களை வழங்கி உற்சாகப்படுத்தினர்.

கல்யாணி உணவகம் மற்றும் சோழன் உணவகம் நிறுவப்பட்டு, சோழன் பல்பொருள் அங்காடியின் 5ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அதிர்ஷ்டலாப சீட்டு விநியோகிக்கப்பட்டிருந்தது.

பிரான்ஸில் இடம்பெற்ற 27ஆவது தமிழர் விளையாட்டு விழா | 27Th Tamil Sports Festival France

நல்வாய்ப்பில் புதிய மகிழுந்திற்கு குலுக்கல் முறையில் 1902 என்ற இலக்கம் தெரிவானதுடன், 100 ஆறுதல் பரிசில்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட பரிசில்களை சோழன் பல்பொருள் வாணிபம் வழங்கியுள்ளனர்.

பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் திரளுடன் இரவு 9.30 மணிவரை இடம்பெற்ற நிகழ்வு கொடி இறக்கத்துடன் நிறைவுபெற்றது.

தமிழர் விளையாட்டு விழா நிகழ்வில் பங்கேற்ற அனைத்து வீரர், வீராங்கனைகள், தன்னார்வத் தொண்டர்கள், குடும்பத்தினர்கள், தேசியக் கட்டமைப்புக்கள், கல்வி நிறுவனங்கள், ஊர் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், வர்த்தக சங்கங்கள், ஊடகங்கள், சமூக வலை ஒளி ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.    

பிரான்ஸில் இடம்பெற்ற 27ஆவது தமிழர் விளையாட்டு விழா | 27Th Tamil Sports Festival France

பிரான்ஸில் இடம்பெற்ற 27ஆவது தமிழர் விளையாட்டு விழா | 27Th Tamil Sports Festival France

பிரான்ஸில் இடம்பெற்ற 27ஆவது தமிழர் விளையாட்டு விழா | 27Th Tamil Sports Festival France

பிறந்தநாளில் சாக்லேட் கொடுத்த மாணவி வைத்தியசாலையில் அனுமதி - அதிபர் மீது பெற்றோர் முறைப்பாடு

பிறந்தநாளில் சாக்லேட் கொடுத்த மாணவி வைத்தியசாலையில் அனுமதி - அதிபர் மீது பெற்றோர் முறைப்பாடு

உலக வரலாற்றில் முதன்முறையாக இலங்கையில் அபூர்வ சத்திர சிகிச்சை வெற்றி

உலக வரலாற்றில் முதன்முறையாக இலங்கையில் அபூர்வ சத்திர சிகிச்சை வெற்றி


33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US