ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசை
களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சிக்குச் சொந்தமான, பாணந்துறை நகரில் உள்ள ஒரு வீட்டிலிருந்து வெள்ளிப் பேழை ஒன்று திருடப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் கூரையிலிருந்து பல ஓடுகளை அகற்றி சந்தேக நபர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
பெறப்பட்ட முறைப்பாடு
இதுவரை நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், மதிப்புமிக்க வெள்ளிப் பேழை ஒன்று திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

திருட்டை நிகழ்த்திய பின்னர், சந்தேக நபர்கள் வீட்டின் பின்புறக் கதவைத் திறந்து தப்பிச் சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாகப் பெறப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
3 கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! Manithan
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam