குமாரபுரம் படுகொலையின் 27 ஆவது ஆண்டு நினைவேந்தல் (PHOTOS)
திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அழித்தொழிப்பு நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
11.02.1996 அன்று சுற்றிவளைக்கப்பட்ட குமாரபுரம் மக்கள் தங்களின் வீடுகளிலும், வீதிகளிலும், வயல் நிலங்களிலும் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டனர்.
கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 26 பேர் குறித்த சம்பவத்தில் பலியானதுடன் 25 பேர் காயமடைந்தனர்.
குறித்த படுகொலை வழக்கின் போது அரச சாட்சியாக மாறிய இராணுவத்தினர் ஒருவர் படுகொலை நடைபெற்ற விடயத்தைத் தெளிவான தெரிவித்திருந்தபோதும் பல வருடங்களாக இக்கொலை வழக்கு நீடிக்கப்பட்டு திருகோணமலையில் இருந்து அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றப்பட்ட பின்னர் எவர் மீதும் குற்றஞ்சுமத்த முடியாமலிருப்பதாக ஜூரிகளின் முடிவினால் வழக்கு கைவிடப்பட்டது.
இந்நினைவேந்தல் நிகழ்வில் குமாரபுரம் மக்கள், அகம் நிறுவனத்தின் பணிப்பாளர் லவன் உட்பட உத்தியோகத்தர்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளர் கலாநிதி.இ.ஸ்ரீஞானேஸ்வரனும் கலந்துகொண்டார்.






