திருகோணமலை குற்றத் தடுப்புப் பிரிவின் சுற்றிவளைப்பில் சிக்கிய இளைஞர்
திருகோணமலை மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் 27 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்தபுரி பகுதியில் நேற்றைய தினம் (17.11.2026) காலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் - பணம் கைப்பற்றல்
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 41 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், அதனை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்ததாகக் கருதப்படும் சுமார் மூன்று இலட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை 48 மணித்தியாலங்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.