வவுனியாவில் மேலும் 27 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!
வவுனியா - பட்டாணிசூர் பகுதியில் 7 பேருக்கு கொரோனா தொற்று பீடித்திருந்தமை கடந்த வாரம் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், பட்டாணிச்சூர் கிராமம் கடந்த ஒரு வாரமாக முடக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நபர்களுடன் தொடர்புகளைப் பேணிய பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதேவேளை,வவுனியா நகரப்பகுதிகளைச் சேர்ந்த வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில்106 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில் 36 பேரது மாதிரிகள் மீளவும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது.
அவர்களது முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றன.அதனடிப்படையில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேலும் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில், கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் வவுனியாவின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri