இலங்கையில் ஒரே நாளில் 26 பேர் கோவிட் தொற்றுக்கு பலி!
இலங்கையில் இன்றைய தினம் 26 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 827 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, இன்று 2, 573 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 128, 479 ஆக அதிகரித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 128,479 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,148 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 105,611 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் 801 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan