இலங்கையுடன் கைகோர்க்கும் ஈரான் - புறக்கணிக்கப்படும் டொலர் வர்த்தகம்
இலங்கை அரசானது , ஈரானுடன் 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான எண்ணெய்க்காக தேயிலையை வழங்கும் பண்டமாற்றுச் சேவையை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கவுள்தாக தெரிவிக்கப்படுகிறது.
2012 இல் இறக்குமதி செய்யப்பட்ட எண்ணெய்க்காக 2021 இல் இந்த உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.
எனினும் கடந்த ஆண்டு இலங்கையின் முன்னோடியில்லாத டொலர் தட்டுப்பாடு பொருளாதாரத்தை மூழ்கடித்தமை காரணமாக இதன் நடைமுறை தாமதமானது.
இந்நிலையில் தற்போது ஈரான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் டொலர்களை நம்பாமல் வர்த்தகம் செய்யலாம் என இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் தெரிவித்துள்ளார்.
தேயிலை ஏற்றுமதி
இதன்படி ஒவ்வொரு மாதமும் 5 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான தேயிலையை 48 மாதங்களுக்கு அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகளவில் பிரபலமான இலங்கை தேயிலை இலங்கையின் அதிக அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பயிராகும். இது கடந்த ஆண்டு 1.25 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஏற்றுமதி வர்த்தகம் மூலம் நாட்டிற்கு கொண்டு வந்தது என்று அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் ஈரான் மீதான அமெரிக்கத் தடைகள் இலங்கை - ஈரான் வர்த்தகத்தை பாதித்ததால் 2018 இல் 128 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து கடந்த ஆண்டு 70 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இந்த ஏற்றுமதி வருமானம் குறைவடைந்துள்ளது.
இதற்கிடையில் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள பண்டமாற்றுத் திட்டத்தின் கீழ், எண்ணெயை கொள்வனவு செய்யும் அரச நிறுவனமான சிலோன் பெட்ரோலியம் கோர்ப்பரேஷன், இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு தேயிலை சபையின் ஊடாக ரூபாவை வழங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 13 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
