சுற்றுலா விடுதியில் களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட 25 பேருக்கு அபராதம், 14 பேருக்கு பிடியாணை
சுற்றுலா விடுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட 25 பேருக்கு தலா 4000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், 14 பேருக்கு பிடியாணை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி மட்டக்களப்பு - கல்லடியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் கோவிட் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி 39 பேர் களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் களியாட்ட நிகழ்வை நடத்தியவர்கள் மீது நீதிமன்ற அனுமதியின் பேரில் பொது சுகாதார பரிசோதகர்களால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு மீதான விசாரணை இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சீ.றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போதே 25 பேருக்கு தலா 4000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், மன்றில் ஆஜராகத் தவறிய 14 பேருக்கும் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam