இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்ட மிளகாய்கள் : வெளியான காரணம்
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 25 கன்டெய்னர் மிளகாய்கள் அஃப்லாடாக்சின் (Aflatoxin) எனும் நச்சுப்பொருள் கலந்திருந்ததால் திருப்பி அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த அஃப்லாடாக்சின் (Aflatoxin) புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய இரசாயணமாகும்.
இலங்கையிலுள்ள வர்த்தகர்கள் குழுவொன்று இந்த மிளகாய் பொதியை இறக்குமதி செய்துள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விசேட தொலைபேசி எண்
இதேவேளை, உணவின் தரம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளைத் தெரிவிப்பதற்காக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு விசேட தொலைபேசி இலக்கமொன்றை (0112112718) அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு முன் அஃப்லாடாக்சின் (Aflatoxin) கொண்ட மக்காச்சோளத்தின் ஒரு சரக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |