மந்துவில் படுகொலையி்ன் 24ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos)
முல்லைத்தீவில், மந்துவில் படுகொலையின் 24ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு தாய் தமிழ் நினைவேந்தல் அமைப்பின் ஒழுங்கு அமைப்பில் புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று (15.09.2023) நடத்தப்பட்டுள்ளது.
நினைவு தின நிகழ்வு
புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட மந்துவில் பகுதியில் 1999ஆம் ஆண்டு இலங்கை விமான படையினர் நடத்திய மிலேச்சத்தனமான குண்டு வீச்சு தாக்குதலில் 24 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையிலேயே மந்துவில் சந்தி பகுதியில் சிறப்பாக அமைக்கப்பட்ட உருவப் படங்கள் வைக்கப்பட்ட பந்தலில் நிகழ்வுகள் சிறப்புடன் நடைபெற்றுள்ளன.
இதில் பொதுச் சுடரினை உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஏற்றி வைத்தமையை தொடர்ந்து 24 பேரின் உருவப்படங்களுக்கு அவர்களின் உறவினர்கள் மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
தாய்த் தமிழ் பேரவையின் இணைப்பாளர் நவநீதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தாய் தமிழ் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சா.ரூபன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச.குகனேசன் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.












யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
