வவுனியாவில் மேலும் 24 தொற்றாளர்கள்! மொத்த எண்ணிக்கை 201 ஆக உயர்வு
வவுனியாவில் 24 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா - பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியாநகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று காலை வெளியாகின.
அதனடிப்படையில் வவுனியாவின் நகரப் பகுதிகளில் உள்ள வியாபார நிலையங்களை சேர்ந்தவர்களுடன் தொடர்புகளை பேணிய 24 பேருக்கு தொற்று இருக்கின்றமை இன்று உறுதிசெய்யப்பட்டது.
வெளிக்குளம், தெற்கிலுப்பைக்குளம், மகாறம்பைக்குளம், பட்டாணிசூர், வேப்பங்குளம் பட்டக்காடு கந்தசுவாமி கோவில் வீதி ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களிற்கே தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த எண்ணிக்கையுடன் வவுனியா நகர கொத்தணி ஒருவாரத்தில் மாத்திரம் 201 ஆக அதிகரித்துள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
