ஜனாதிபதி தேர்தல் களம்: கட்டுப்பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை மொத்தம் 24 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செய்துள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 11 வேட்பாளர்களும், 12 சுயேட்சை வேட்பாளர்களும் மற்ற அரசியல் கட்சி ஒன்றில் இருந்து ஒரு வேட்பாளரும் அடங்குவர்.
இரண்டு வேட்பாளர்கள் சார்பில் நேற்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். பண்டார மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர சிட்னி ஜயரத்ன ஆகியோயோர் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி நிலை
இதனை தவிர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க, சரத் கீர்த்திரத்ன மற்றும் கே.கே. பியதாச, விஜயதாச ராஜபக்ஷ, ஓஷல ஹேரத், ஏ.எஸ்.பி. லியனகே, சஜித் பிரேமதாச, பி.டபிள்யூ.எஸ்.கே. பண்டாரநாயக்க, அஜந்த டி சொய்சா, சிறிதுங்க ஜயசூரிய, கே.ஆனந்த குலரத்ன, சரத் மனமேந்திர, அக்மீமன தயாரத்ன தேரர், பத்தரமுல்லே சீலரத்ன தேரர், சஹேரிபால தேரர், சரத் பொன்சேகா மற்றும் கே.ஆர்.கிருஸ்ணன், அந்தோனி விக்டர் பெரேரா, முஹம்மது இல்யாஸ், பேமசிறி மானேஜ் ஆகியோர் ஜனாதிபதி நிலைக்காக போட்டியிடுகின்றனர்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |