மன்னாரில் 24 வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஜிம் பிறவுண் நகர் கிராமத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட 24 வீடுகள் இன்று (26) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டன.
இந்திய அரசினால் வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் நிதி உதவி, இலங்கை அரசினால் வழங்கப்பட்ட 1 இலட்சம் ரூபாய் நிதி உதவி மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NHDA) ஊடாக வழங்கப்பட்ட வீட்டுத் திட்ட கடன் உதவி ஆகியவற்றின் மூலம் இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே. கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி. சரத் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் இணைந்து வீடுகளை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் மன்னார் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா ஜெகதீஸ்வரன், பிரதேச செயலாளர் எம். பிரதீப், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 9 நிமிடங்கள் முன்

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

புதிய சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் வினுஷா... எந்த டிவி தொடர் தெரியுமா? Cineulagam

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri
