பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்காக விமான நிலையத்தில் புதிய பேருந்து சேவை!
புதிய அதிவேக நெடுஞ்சாலை பேருந்து சேவை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இதன்படி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை புதிய அதிவேக நெடுஞ்சாலை பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பேருந்து சேவை
இந்த பேருந்து சேவை 24 மணி நேரமும் இயங்கும் என்று விமான நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 187 A/C பேருந்து சேவை, கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை வழியாக முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த சேவையை பெறும் பயணிகள், விமான நிலையத்தில் உள்ள புறப்பாடு முனையத்தின் வெளிப்புற தாழ்வாரத்திலிருந்து பேருந்தில் ஏறலாம்.
மேலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு போக்குவரத்து அணுகலை கணிசமாக மேம்படுத்துவதற்காக, இந்த பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலதிக தகவல்: இந்திரஜித்
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam