இலங்கையில் மேலும் 24 பேர் கோவிட் தொற்றுக்கு பலி!
கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, இலங்கையில் கோவிட் -19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 892 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் 2249 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 135796 ஆக உயர்ந்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்ட அனைவரும் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்றிலிருந்து 108802 பேர் குணமடைந்துள்ளனர்.
அத்துடன், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 26,126 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 16 மணி நேரம் முன்

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam
