காசா மீது வீசப்பட்ட 230 கிலோ குண்டு! இஸ்ரேலின் போர்க்குற்றம் அம்பலம்
காசாவில் பிரபல கடற்கரை விடுதி ஒன்றில் இஸ்ரேல் MK-82 என்ற 230 கிலோ எடை கொண்ட அமெரிக்க தயாரிப்பு குண்டு ஒன்றை வீசியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை(30.06.2025) நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஒரு போர்க்குற்றம் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் அப்பகுதியில் இருந்தது உறுதி செய்யப்பட்டதால் இது ஒரு போர்குற்றமாக கருதப்படுகின்றது.
போர்க்குற்றம்
எனினும், தாக்குதல் நடத்தப்பட முன்னர், வான்வழி கண்காணிப்பைப் பயன்படுத்தி பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அபாயத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 30இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், நெரிசல் மிகுந்த விடுதியில் இவ்வளவு பெரிய ஆயுதத்தைப் பயன்படுத்துவது போர்க்குற்றமாக விசாரிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெர்ரி சிம்ப்சன் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |